யாசகம் பெற்று வந்த கிளிநொச்சி வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடை அமைத்துக் கொடுத்து அவரது வாழ்வாதாரத்துக்குக் கை கொடுத்துள்ளனர் நன்னொடையாளர்.
யாழ்ப்பாணம் எய்ட் நிறுவனம் ஊடாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும் கனடா வாழ் புலம்பெயர் தமிழருமானகொட்வின் தினேஸ் தனது மனைவி நீரு தினேஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடை அமைத்துக் கொடுத்துள்ளார்.
GOLDEN MEMORIES அமைப்பினர் கடைக்கான முழுமையான பொருள்களையும், யாழ் எய்ட் நிறுவனம் குளிர்சாதன பெட்டி, மேசை, கதிரை,தராசு போன்ற பொருள்களையும் வழங்கியுள்ளது.